உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எஸ்.டி.ஈடன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

எஸ்.டி.ஈடன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சேத்தியாத்தோப்பு: வடலுார் எஸ்.டி., ஈடன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் காண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது. விழாவிற்கு பள்ளி முதல்வர் சுகிர்ததாமஸ் தலைமை தாங்கினார், நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ், இணை இயக்குனர் பவித்ரா, துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர்களின் உருவாக்கத்தில் பார்வையற்றோர் முன் வரும் நபர்களை அறியும் வகையில் ஸ்மார்ட் கண்ணாடி, நடக்கும் ரோபோ, மாணவர்களே இயக்கும் ஈ.சி.ஜி,, ஓட்டுனர் இல்லாமல் சரியான வழித்தடத்தை பின்பற்றி செல்லும் மாதிரி சொகுசு கார் உள்ளிட்ட படைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. உணவுத் திருவிழாவில், பாரம்பரிய உணவு, சிறுதானிய உணவுகள், காய்கறி உணவு உள்ளிட்டவைகள் பல இடம்பெற்றிருந்தது. வடலுார் நுகர்வோர் சபை செயலாளர் கனகசபை கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். அறிவியல் கண்கா்ட்சி தலைவர் புஷ்பலதா, துணை தலைவர் மகாலட்சுமி மாணவர்களின் திறனை வெளிக்கொணரும் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி