உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பல்லவா சர்வதேச பள்ளியில் அறிவியல் மன்ற விழா 

பல்லவா சர்வதேச பள்ளியில் அறிவியல் மன்ற விழா 

கடலுார்; நெல்லிக்குப்பம் அடுத்த கீழக்குப்பம் பல்லவா சர்வதேச பள்ளியில் அறிவியல் மன்ற செயல்பாட்டு விழா நடந்தது.பள்ளித் தாளாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் மோகன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் சி.கே. பொறியியல் கல்லுாரி விரிவுரையாளர் தண்ட பாணி குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து பேசினார். மாறுவேடப் போட்டி, தனி நடிப்பு, அறிவியல் கண்காட்சி என பல நிகழ்ச்சிகள் நடந்தது. எல்.கே.ஜி., - யூ.கே.ஜி., பிரிவு மாணவ, மாணவியர் தங்களின் பெற்றோருடன் இணைந்து பயனற்ற பழைய பொருட்களை கொண்டு பயனுள்ள புதியபொருட்களை உருவாக்கி காட்சிப்படுத்தினர். இதில், சிறந்து படைப்புகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் இளையராஜா, விஜயசாந்தி, துர்கை செய்திருந்தனர். மாணவி கார்த்திகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை