உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போக்சோ வில் காவலாளி கைது

போக்சோ வில் காவலாளி கைது

சிதம்பரம்: சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலாளியை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த சிதம்பரநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்,55; சிதம்பரம் பள்ளிப்படை பகுதியில் உள்ள சாவித்திரி கார்டனில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவர், 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நேற்று ஆறுமுகத்தை கைது செய்தனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ