உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சில்வர் பீச்சில் மதி அங்காடி நடத்த சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்கலாம்

சில்வர் பீச்சில் மதி அங்காடி நடத்த சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்கலாம்

கடலுார்: தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் திறக்கப்படவுள்ள மதி அங்காடியை செயல்படுத்த மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு: கடலுார், தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் மதி அங்காடி புதியதாக கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது. இதனை செயல்படுத்த மகளிர் சுய உதவிக்குழுவிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்போர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு தேசிய ஊரக, நகர்புற வாழ்வாதார இணையத்தில் பதிவு பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மகளிர் சு ய உதவிக்குழுக்கள் 5 முதல் 8 கி.மீ., துாரத்திற்குள் இருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் 'ஏ' அல்லது 'பி' தகுதி பெற்றிருக்க வேண்டும். பொருட்கள் விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவமுடையவராக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோர் குழுக்கள், விதவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சுய உதவிக்குழு துவங்கி, ஒரு ஆண்டாவது பூர்த்தி செய்திருக்க வேண்டும். சுய உதவிக்குழு தர மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்று இருப்பதுடன் வங்கி கடன் இணைப்பு பெற்றிருக்க வேண்டும். சுய உதவிக்குழுவின் மீது எவ்வித புகார்களும் இல்லை என்பதை சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாளர், சமுதாய அமைப்பாளர் சான்றிதழ் வாங்க வேண்டும். தகுதியான மகளிர் சுய உதவிக்குழுவினர் வரும் 14ம் தேதி மாலை 5.00 மணிக்குள் பூமாலை வணிக வளாகம், திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, கடலுார் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை