உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா விற்பனை: வாலிபர் கைது

கஞ்சா விற்பனை: வாலிபர் கைது

நெல்லிக்குப்பம்: பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி,சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் நடுவீரப்பட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.மந்தக்கரை பகுதியில் சந்தேகபடும்படி நின்றிருந்த வாலிபரிடம் விசாரனை செய்தனர்.அவர் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் துணிகளுக்கு இடையே கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.விசாரணையில் நடுவீரப்பட்டை சேர்ந்த முருகன் மகன் பூபாலன்,24; என தெரிந்தது.பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து பூபாலனை கைது செய்து 2 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ