மூத்தோர் தடகள விளையாட்டு சங்க கூட்டம்
கடலுார்,; கடலுாரில் மாவட்ட மூத்தோர் தடகள விளையாட்டு சங்கத்தின் மாதாந்திர கூட்டம் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. சங்க துணைத் தலைவர் திருமலை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வெங்கடேஸ்வரன், உயர்மட்டக்குழு உறுப்பினர் நடராஜன், செயலாளர் சுபாஷ்பாபு பேசினர். கூட்டத்தில், சங்கத்திற்கு தனி இடம் கேட்பது மற்றும் சங்க வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். ராஜ்மோகன், முத்துசாமி, வைரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் திருஞானம் நன்றி கூறினார்.