சிப்காட் தீயணைப்பு துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி
கடலுார்; கடலுார் சிப்காட் தீயணைப்பு துறை சார்பில் வாங்க கற்றுக்கொள்வோம் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கடலுார் சிப்காட்டில் நடந்தது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் சீமா அகர்வால், விழுப்புரம் மண்டல துணை இயக்குநர் தென்னரசு உத்தரவுபடி, மாவட்ட அலுவலர் பாஸ்கரன் வழிகாட்டுதலின்படி கடலுார் சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ''வாங்க கற்றுக் கொள்வோம்'' எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன், முருகன், வேலரசன், ரமேஷ். முன்னிலை வகித்தனர். பொது மக்கள் பயன் பெறும் வகையில் அத்தியாவசிய தீ பாதுகாப்பு குறித்து வகுப்பு மற்றும் பயிற்சி நடத்தப்பட்டது. ஒரு நாளில் காலை, மதியம், மாலை என மூன்று வேளை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.