உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சமுதாய கூட்டமைப்பு நிர்வாகக்குழு கூட்டம்

சமுதாய கூட்டமைப்பு நிர்வாகக்குழு கூட்டம்

விருத்தாசலம் : மங்கலம்பேட்டையில் அனைத்து சமுதாய கூட்டமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.தலைவர் அப்துல் பாரி தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் முருகதாஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வம், பக்தவச்சலம் முன்னிலை வகித்தனர். செயலாளர் நயினா முகமது வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ஆபிருதீன் தீர்மானங்கள் வாசித்தார்.துணைத் தலைவர் சோழபிரகாஷ், துணை பொருளாளர் முகம்மது சலீம், நிர்வாகக்குழு உறுப்பினர் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். தீவிரவாத தாக்குதலில் பலியான நபர்களுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.தொடர்ந்து, பஹல்காம் தீவிரவாத தாக்குதலை போல, எதிர்காலத்தில் நிகழாத வகையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். ஆபரேஷன் சிந்துார் மூலம் வெற்றியை பெற்றுத்தந்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் சக்திவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை