உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் அஞ்சல் கோட்டத்தில் இன்று முதல் சிறப்பு முகாம்

கடலுார் அஞ்சல் கோட்டத்தில் இன்று முதல் சிறப்பு முகாம்

கடலுார்; கடலுார் அஞ்சல் கோட்டத்தில் இன்று( 15 ம் தேதி) முதல் ஆதார் மற்றும் சர்வதேச அஞ்சல் சேவை சிறப்பு முகாம் நடக்கிறது.கடலுார் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கணேஷ் செய்திக்குறிப்பு;கடலுார் அஞ்சல் கோட்டத்தில் ஆதார் மற்றும் சர்வதேச அஞ்சல் சேவைக்கான சிறப்பு முகாம் சித்திரை திருவிழா என்ற பெயரில் இன்று 15 முதல் 30ம் தேதி வரை நடக்கின்றது. கடலுார், சிதம்பரம் தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் ஆதார் சேவை மையம் அமைந்துள்ள அனைத்து துணை அஞ்சல் அலுவலகங்களிலும் இம்முகாம் நடக்கிறது.புதிய ஆதார் பதிவு முற்றிலும் இலவசம். பெயர், முகவரி மற்றும் மொபைல் எண் திருத்தங்களுக்கு ரூ. 50 கட்டணமாகவும், கைரேகை மற்றும் புகைப்படம் புதுப்பித்தலுக்கு ரூ. 100 கட்டணமாகவும் செலுத்த வேண்டும். பொதுமக்கள் தங்களது சரியான ஆவணங்களுடன் வந்து ஆதார் தொடர்பான சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.இதேபோன்று, அனைத்து தலைமை அஞ்சல் அலுவலகங்களில் உள்ள பார்சல் கட்டும் சேவை மையங்களிலும், அனைத்து துணை அஞ்சல் அலுவலகங்களிலும் சர்வதேச அஞ்சல் சேவைக்கான சிறப்பு முகாம் நடக்கிறது.இதன் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், குறைந்த செலவில் வெளிநாடுகளுக்கு பார்சல்களை அனுப்பும் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.பார்சல்களை பேக் செய்வதற்கு தேவையான பொருட்களுடன், பெட்டிகளின் மீது ஸ்ட்ராப்பிங் ரோல் போடுவதற்குரிய ஸ்ட்ராபிங் மெஷின் கடலுார், சிதம்பரம் தலைமை அலுவலகங்களிலும், பண்ருட்டி துணை அஞ்சலகங்களிலும் பார்சல் கட்டும் மையத்தில் தயாராக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை