உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சரபேஸ்வரருக்கு சிறப்பு பூஜை

சரபேஸ்வரருக்கு சிறப்பு பூஜை

நெல்லிக்குப்பம்: மேல்பட்டாம்பாக்கம் சிவலோகநாதர் கோவிலில் சரபேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் பழமையான ஞானபார்வதி உடனுறை சிவலோகநாதர் கோவில் உள்ளது.இங்கு சரபேஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது சிறப்பாகும்.ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் சரபேஸ்வரரை வணங்கினால் கஷ்டங்கள் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.வருடத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று ராகுகாலத்தில் 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பி யாகம் செய்து சரபேஸ்வரருக்கு சங்காபிஷேகம் நடந்தது.சரபேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.பூஜைகளை வாகீசன் குருக்கள் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை