ஊர்க்காவல் படைவீரர்களுக்கு விளையாட்டு போட்டி
கடலுார்,;விழுப்புரம் சரக ஊர்க்காவல் படை சோழா 29வது பணித்திறன் மற்றும் விளையாட்டு போட்டி நடந்தது.கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்த போட்டியை, சரக உதவி தளபதி கேதர்நாதன் துவக்கி வைத்தார். இதில், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர்கள் பங்கேற்றனர். இதில், ஆண்கள் பிரிவில் 100 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், கைப்பந்து, கபடி, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், விளையாட்டு போட்டிகள் மற்றும் பெண்கள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், கைப்பந்து, த்ரோ பால், கபடி மற்றும் மீட்பு பணி, முதலுதவி, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்.பி., ராஜாராம் பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது, டி.எஸ்.பி., சவுமியா, ஊர்க்காவல் படை வட்டார தளபதிகள் அம்ஜத்கான், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் அருட்செல்வன் மற்றும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட வட்டார தளபதிகள், துணை வட்டார தளபதிகள், ஊர்க்காவல் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.