உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் விளையாட்டு தின விழா

ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் விளையாட்டு தின விழா

சேத்தியாத்தோப்பு : சிதம்பரம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் மூன்றாம் ஆண்டு விளையாட்டு தின விழா நடந்தது. சிதம்பரம் பைபாஸ் சாலை ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகத்தில் நடந்த விளையாட்டு தின விழாவிற்கு பள்ளி தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ரேணுகா கண்ணன் வரவேற்றார். விழாவில், சிதம்பரம் சரதாராம் ஹோட்டர் நிறுவனர் மற்றும் குருஞானசம்பந்தர் பள்ளி தாளாளர் ஸ்வேதகுமார் சிறப்புரையாற்றினார். விழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள், சான்றுகள் வழங்கி பாராட்டினர். அதனை தொடர்ந்து 2025ம் ஆண்டில் ஆண்களுக்கான சாம்பியன்ஷிப் விருதினை ஒன்பதாம் வகுப்பு மாணவன் செம்மொழிசெல்வனுக்கும், பெண்களுக்கான விருதினை ஒன்பதாம் வகுப்பு மாணவி நந்திகா ஆகியோர் வென்றனர். ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை