செயின்ட் ஜோசப் கல்லுாரி பட்டமளிப்பு விழா
கடலுார் : கடலுார் செயின்ட் ஜோசப் கலை, அறிவியல் கல்லுாரியில் நடந்த 30வது பட்டமளிப்பு விழாவில் ஆயிரத்து 20 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.விழாவிற்கு நெய்வேலி என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஆயிரத்து 20மாணவர்களுக்கு பட்டம் வழங்கி, பேசினார்.கல்லுாரி செயலாளர் சுவாமிநாதன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் அருமைசெல்வம் ஆண்டறிக்கை வாசித்தார். மூத்த துணை முதல்வர் ஜோன் ஆரோக்கியராஜ், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சேவியர் மற்றும் துணை முதல்வர்கள், அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.