உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

திட்டக்குடி: திட்டக்குடியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது. நகராட்சி துணை சேர்மன் பரமகுரு தலைமை தாங்கினார். அமைச்சர் கணேசன் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். நகராட்சி சேர்மன் வெண்ணிலா கோதண்டம் வரவேற்றார். ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா, தாசில்தார் உதயகுமார், நகராட்சி கமிஷனர் முரளிதரன், தி.மு.க., அயலக பிரிவு சேதுராமன், வார்டு கவுன்சிலர்கள், வார்டு மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், 13 துறைகளை சேர்ந்த அதிகாரிகள், நகராட்சியின் 1 மற்றும் 2வது வார்டு மக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றனர். தேர்வு செய்யப்பட்ட பயிர் கடன், மின் இணைப்பு, பட்டா மாற்றம் ஆகியவை குறித்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணையை அமைச்சர் கணேசன் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை