உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது. சேர்மன் ஜெயந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். பின், துாய்மை பணியாளர்களுக்கு தாட்கோ அடையாள அட்டைகள் வழங்கினார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 15 துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு 43 சேவைகள் வழங்கினர். துணை சேர்மன் கிரிஜா, கமிஷனர் கிருஷ்ணராஜன், மேலாளர் சரவணன், தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன், கவுன்சிலர்கள் சத்தியா, ஹேமாவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.