உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்   

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்   

புவனகிரி : புவனகிரியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாக னன் தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் மதியழகன், மகளிரணி செயலாளர் அமுதாராணி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் தாசில்தார் அன்பழகன், முகாமை துவக்கி வைத்தார். 15 துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று 46 சேவைகள் தொடர்பான மனுக்கள் பெற்றனர். கர்ப்பி ணிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் கிருஷ்ணன், செல்லப்பாண்டியன், சண்முகம், அண்ணாஜோதி, தி.மு.க., அவைத் தலைவர் நெடுமாறன், இன்ஜினியர் அணி ராமன், தம்பா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இளநிலை உதவியாளர் முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை