விருத்தாசலம் : முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, விருத்தாசலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., மற்றும் இளைஞரணி சார்பில், கோணாங்குப்பம் செவித்திறன் குறைவுடையோர் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட இலக்கிய அணி தலைவர் கருணாநிதி, ஒன்றிய அவை தலைவர் சிவசங்கரன், ஒன்றிய துணை செயலாளர்கள் தர்ம மணிவேல், கோவிந்தராசு அன்பழகி, ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், பாலகிருஷ்ணன், சிவக்குமார், ஒன்றிய பொருளாளர் சாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் பரமகுரு, ஊராட்சி தலைவர்கள் சவுமியா வீரமணி, கீதா துரைமுருகன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுபாஷ், சண்முகம், வீரபாண்டியன், கிளை செயலாளர்கள் ராஜேந்திரன், மணிவேல் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.முன்னதாக, வடக்கு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.