உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநில வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி கடலுாரில் வரும் 13ம் தேதி துவக்கம்

மாநில வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி கடலுாரில் வரும் 13ம் தேதி துவக்கம்

கடலுார்: கடலுார் டைகர் இன்டர்நேஷனல் வில்வித்தை அகாடமி சார்பில், மாநில அளவிலான வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி வரும் 13ம் தேதி கடலுாரில் துவங்குகிறது.இதுகுறித்து கடலுார் டைகர் இன்டர்நேஷனல் வில்வித்தை அகாடமி நிறுவன தலைவர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு. கடலுார் டைகர் இன்டர்நேஷனல் வில்வித்தை அகாடமி மற்றும் கடலுார் மாவட்ட யூத் டார்கெட் வில்வித்தை அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி, வரும் 13ம் தேதி கடலுார் சின்னகங்கணாங்குப்பத்திலுள்ள புனித அந்தோணி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. அதில் துவக்க நிலையில் உள்ளவர்களுக்கு ஆறு நிலைகளிலும், இந்தியன் பவ், ரீகர்வ் பவ், காம்பவுண்ட் பவ் பிரிவில் ஐந்து நிலைகளிலும் போட்டிகள் நடக்கிறது. போட்டியில் பங்கேற்க பதிவுக்கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !