உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநில குத்துச்சண்டை போட்டி; பண்ருட்டி மாணவர்கள் தகுதி

மாநில குத்துச்சண்டை போட்டி; பண்ருட்டி மாணவர்கள் தகுதி

பண்ருட்டி; கடலுார் மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில் குத்துச்சண்டை போட்டி ஸ்ரீமுஷ்ணம் கலை கல்லுாரியில் நடந்தது. இதில் பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 14 வயது பிரிவில் 8ம் வகுப்பு மாணவர் சந்திரசேகர், நந்தகுமார் இருவரும் வெண்கல பதக்கம் பெற்றனர்.பிளஸ் 2 மாணவர் சஞ்சய் 19 வயது பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். பிளஸ் 1 மாணவர் சச்சின் சி2 போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார். பி2 பிரிவில் மாணவர் முகமது சுைஹல், தங்க பதக்கம் வென்றனர்.தங்கப் பதக்கம் வென்ற சச்சின், முகமது சுைஹல் இருவரும் மயிலாடுதுறையில் வரும் ஜன., 28ம் தேதி நடைபெறும் மாநில அளவிலான குத்துசண்டை போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் ஆலமர் செல்வம், பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு சண்முகவள்ளி பழனி, உடற்கல்வி இயக்குனர் சீனுவாசன், உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ