உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநில கால்பந்து போட்டி: கடலுார் அணி சாம்பியன்

மாநில கால்பந்து போட்டி: கடலுார் அணி சாம்பியன்

கடலுார்; தஞ்சாவூரி்ல நடந்த மாநில அளவிலான கால்பந்து போட்டியில் கடலுார் அணி சாம்பியன் பட்டம் வென்றது. தஞ்சாவூரில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடந்தது. இதில், 10வயதுக்குட்பட்ட பிரிவில் கடலுார், திருச்சி, தஞ்சாவூர் உட்பட 12க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் கடலுார் நைசா அணியும், தஞ்சாவூர் அணியும் மோதின. இதில், நைசா அணி 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.இதனையொட்டி நைசா அணியின் ஹரிஷ்தேவ் தலைமையிலான வீரர்கள் சூர்யபிரகாஷ், தவசூர்யா, தருண்ஜெய், அபினேஷ், விஷ்ணுவர்த்தினி ஆகியோரை தலைமை பயிற்சியாளர் செந்தில்குமார், பாலாஜி ஆகியோர் பாராட்டினர். சுழற்கோப்பை மற்றும் பரிசு டிச., மாதம் இறுதியில் நடக்கும் திறந்த வெளி போட்டியில் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை