மேலும் செய்திகள்
உடல் உறுப்புகள் வேண்டி 7797 பேர் காத்திருப்பு
24-Sep-2024
நெய்வேலி : நெய்வேலியில் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட உடலுக்கு எம்.எல்.ஏ., தலைமையில் அரசு மரியாதை செய்யப்பட்டது.நெய்வேலி வட்டம் 1, மாற்று குடியிருப்பை சேர்ந்தவர் பாலாஜி, 42; டிரைவர். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் ஹரி, கிருஷ்ணன் என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த 13 ம் தேதி, அதிகாலை, நெய்வேலியில் சாலையில் சென்றபோது, குறுக்கே ஓடிய மான் மீது மோதி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.என்.எல்.சி.,மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாலாஜி., மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மூளைச்சாவு அடைந்தார். அதையடுத்து, அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் பாலாஜியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து பாலாஜியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.அதையடுத்து, நெய்வேலியில் வைக்கப்பட்டிருந்த பாலாஜியின் உடலுக்கு சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ., அபிநயா, டி.எஸ்.பி.,சபியுல்லா, இன்ஸ்பெக்டர் சுதாகர் வி.ஏ.ஓ., கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினர்.
24-Sep-2024