மேலும் செய்திகள்
மாநில சப்-ஜூனியர் கபடி கோவை அணி வீரர் தேர்வு
23-Dec-2024
கடலுார் : மாநில அளவிலான சப் ஜூனியர் கபடி போட்டிக்கு, கடலுார் மாவட்ட அணி தேர்வு நடந்தது.நாகப்பட்டினம் மாவட்டம், பாப்பாக்கோவிலில் வரும் 27 முதல் 29ம் தேதி வரை மாநில அளவிலான 34வது சப் ஜூனியர் கபடி போட்டி நடக்கிறது. இதற்காக கடலுார் மாவட்ட அணிக்கான, சிறுவர் மற்றும் சிறுமியர் தேர்வு நடந்தது.கடலுார் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்த தேர்வில், மாவட்டத்தை சேர்ந்த 160 சிறுவர்கள், 78 சிறுமியர் பங்கேற்றனர்.கடலுார் மாவட்ட கபடி கழக தலைவர் வேலவன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் சுப்ரமணி, நவநீதராமன் முன்னிலை வகித்தனர். தேசிய கபடி வீரர் ஞானமுருகன், உடற்கல்வி ஆசிரியர்கள் புஷ்பராஜ், மாரி, ஜீவா, அருள்செல்வன், மணிகண்டன், பரணிதரன் ஆகியோர் தேர்வு செய்தனர். ஒவ்வொரு குழுவிற்கும் 12 பேர் தேர்வு செய்தனர்.ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் நடராஜன் செய்திருந்தார்.
23-Dec-2024