உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ் படிக்கட்டில் பயணித்த மாணவர் தவறி விழுந்து படுகாயம்

பஸ் படிக்கட்டில் பயணித்த மாணவர் தவறி விழுந்து படுகாயம்

நெல்லிக்குப்பம்:பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர் தவறி விழுந்து படுகாயமடைந்தார.் திருவெண்ணெய்நல்லுாரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராக்கேஷ்,16; இவர் நெல்லிக்குப்பத்தில் உள்ள தனது பாட்டி வீட்டல் தங்கி தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் கடந்த வாரம் இறுதியில், திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். நேற்று காலை மேல்பட்டாம்பாக்கத்திற்கு வந்தார். அங்கிருந்து, நெல்லிக்குப்பம் வருவதற்காக, சிறுவந்தாட்டில் இருந்து கடலூர் செல்லும் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தார். குடிதாங்கிசாவடி அருகே பஸ் டிரைவர் சடன் பிரேக் அடித்தார். அதில், பஸ் படிக்கட்டில் தொங்கி வந்த ராக்கேஷ் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதில் தலையில் படுகாயமடைந்த ராக்கேைஷ, அங்கிருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை