உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வில்வித்தை போட்டி விருதை மாணவர்கள் சாதனை

வில்வித்தை போட்டி விருதை மாணவர்கள் சாதனை

கடலுார்: விருத்தாசலம் மாணவர்கள் வில்வித்தை போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்தனர். சென்னை ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வி கல்லுாரியில் நடந்த வில்வித்தை போட்டி நடந்தது. இதில், விருத்தாசலம் ரைட் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் பயிற்சியாளர் கமலேஸ்வரன் தலைமையில் 10, 13 மற்றும் 15வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் 10 பேர் பங்கேற்றனர். போட்டியில் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் மாணவர் கனிஷ், 10 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் மாணவர் சுதர்சன் ராஜா ஆகியோர் மூன்றாமிடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் இருவரையும் பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை