| ADDED : மார் 20, 2024 05:02 AM
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு செம்மண் குவாரிக்கு வரும் டாரஸ் லாரிகள் அதிவேகமாக செல்வதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.நடுவீரப்பட்டு சுற்றியுள்ள மலைபகுதிகளில் உள்ள செம்மண் குவாரி களுக்கு தினமும் நூற்றுக் கணக்கான டாரஸ் லாரிகள் வந்து செம்மண் ஏற்றி செல்கிறது. இந்த குவாரிகள் உள்ள சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.ஆரம்பசுகாதார நிலையத்திற்கு பொதுமக்களும், பள்ளிக்கு மாணவர்களும் வந்து செல்லும் சாலையில், செம்மண் ஏற்றிய டாரஸ் லாரிகள் அதிவேகமாக சென்று வருகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. லாரிகளின் மேற்பகுதியில் தார்பாய் போட்டு மூடாமல் செல்வதால் மண்புழுதி பறப்பதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் லாரிகள் பள்ளி நேரத்தில் இயக்கப்படுவதை நிறுத்தவும், செம்மண் புழுதி பறக்காமல் இருக்க தார்பாய் போட்டு மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.