உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மிராளூர் விதைப்பண்ணையில் மாணவர்கள் களப்பயணம்

மிராளூர் விதைப்பண்ணையில் மாணவர்கள் களப்பயணம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த மிராளூர் அரசு விதைப் பண்ணையில் விதை சுத்திகரிப்பு நிலையம், வயல்வெளி நடவு பகுதிகளில் மாணவர்கள் வயலாய்வு மேற்கொண்டனர்.விருத்தாசலம் ஆலடி அரசு மேல்நிலைப்பள்ளி வேளாண் அறிவியல் தொழில்நுட்ப மாணவ, மாணவியர் 52 பேர், நேற்று மிராளூர் அரசு பண்ணைக்கு வந்தனர். அங்குள்ள விதை சுத்திகரிப்பு நிலையம், வயல்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் ரகங்கள் மற்றும் பாரம்பரிய நெல் ரகம் துாய மல்லி வயலை ஆய்வு செய்தனர். அவர்களுக்கு, விதைப்பண்ணை அலுவலர் சரவணன் விதை சுத்திகரிப்பு பற்றியும், அதன் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.உதவி வேளாண் அலுவலர் வினோத்குமார், பள்ளி ஆசிரியர்கள், விதைப் பண்ணை தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ