மேலும் செய்திகள்
கொங்கு பாலிடெக்னிக் செஸ் போட்டியில் முதலிடம்
05-Oct-2025
சிதம்பரம்: மண்டல அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் தேச்சி பெற்றுள்ளனர். கடலூர் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்டப் போட்டிகள் நெய்வேலியில் நடந்தது. இதில் 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பூப்பந்தாட்ட போட்டியில் சிதம்பரம் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மாணரவர்கள் முதலிடம் பெற்று மண்டல அளவிலான போட்டிக்குத் தேர்ச்சி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் பிரபாகரன், தமிழ் நிலவன், தஷ்ணா மூர்த்தி, கிருஷ், சுரேந்தர், கோகுல், விஜயமகாதேவன், ஹரிஷ், போதி ராஜ், முகம்மது முஜாமல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சீனுவாசன், வெங்கடேஷ் ஆகியோரை பள்ளி செயலாளர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் திருநாவுக்கரசு, தலைமையாசிரியர் சங்கரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
05-Oct-2025