உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கற்றல் வாசிப்பு திறன் வீரநத்தம் பள்ளியில் ஆய்வு

கற்றல் வாசிப்பு திறன் வீரநத்தம் பள்ளியில் ஆய்வு

கடலுார் : குமராட்சி வட்டாரக் கல்வி அலுவலகம் சார்பில் வீரநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நுாறு சதவீதம் கற்றல் வாசிப்பு திறன் ஆய்வு நடந்தது. குமராட்சி வட்டார கல்வி அலுவலர் நடராஜன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்மதி வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர்கள் விஜயக்குமார், ரஞ்சித், சத்தியசீலன், முனுசாமி ஆகியோர் கொண்ட ஆய்வுக் குழுவினர் மாணவ, மாணவிகளிடம் தமிழ், ஆங்கிலம் படித்தல், எழுதுதல் மற்றும் கணித அடிப்படைகற்றல் செயல்பாடுகள் போன்ற அடிப்படை செயல்கள் குறித்து ஆய்வு செய்தனர். தமிழ் ஆங்கிலம் இரு மொழிப் பாடங்களிலும் நுாறு சதவீதம் வாசிப்பு திறன் கொண்ட மாணவர்களாக இருப்பதை பாராட்டு தெரிவித்தனர்.தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ராஜ்நாராயணன், செந்தில், செந்தில்குமார், தமிழ்மதி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் நந்தினி, இல்லம் தேடி தன்னார்வலர்கள், பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை