உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லட்சுமி நரசிம்மர் கோவிலில் 8ம் தேதி சுதர்சன ஹோமம்

லட்சுமி நரசிம்மர் கோவிலில் 8ம் தேதி சுதர்சன ஹோமம்

கடலுார்; விழுப்புரம் அடுத்த பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், வரும் 8ம் தேதி சுவாமி சிறப்பு ஹோமம் நடக்கிறது.விழுப்புரம் மாவட்டம், பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் வரும் 8ம் தேதி சுவாதி சுதர்சன தன்வந்திரி ஹோமம் நடக்கிறது. அதை முன்னிட்டு அன்று காலை 6:00 மணிக்கு மேல் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமிக்கு தங்க கவசம் அணிவித்து, தீபாராதனை நடக்கிறது. மூலவர் பெருமாள் தங்க கவசத்தில் தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஹோமத்தில் உற்சவர் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் யாக சாலையில் எழுந்தருளுகிறார். காலை 10:00 மணிக்கு மேல் நரசிம்ம சுதர்சன தன்வந்திரி ஹோமம் நடக்கிறது. 12:30 மணிக்கு பூர்ணாஹூதியை தொடர்ந்து யாகத்தில் பூஜை செய்யப்பட்ட சுவாதி கயிறு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமலிங்கம், தலைமை அர்ச்சகர் பார்த்தசாரதி மற்றும் கிராம மக்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை