உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார்- - புதுச்சேரிக்கு பஸ்களில் திடீர் கட்டண உயர்வு

கடலுார்- - புதுச்சேரிக்கு பஸ்களில் திடீர் கட்டண உயர்வு

கடலுார் : புதுச்சேரிக்கான பஸ் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.கடலுார்-புதுச்சேரிக்கு தனியார் பஸ்களில் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம், கடலுார்-புதுச்சேரி சாலையில் தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் அருகே பாலம் உள்வாங்கியது.இதனால், இச்சாலையில் பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, தவளக்குப்பம், வில்லியனுார் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால், பஸ்கள் கூடுதலாக 10 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.இதனால், தனியார் பஸ்களில் கடலுார்-புதுச்சேரி பஸ் கட்டணத்தை ரூ.30 ஆக உயர்த்தி வசூலிக்க துவங்கியுள்ளனர். இது பயணிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஆனால், அரசு பஸ்களில் பழைய கட்டணத்திலேயே பஸ்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை