உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திடீர் கனமழை  பொதுமக்கள் மகிழ்ச்சி  

திடீர் கனமழை  பொதுமக்கள் மகிழ்ச்சி  

திட்டக்குடி : திட்டக்குடி, பெண்ணாடம் பகுதிகளில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் வெளியே சென்று வர முடியாமல் அவதிக்குள்ளாகினர். நேற்று மாலை 4:30 மணிக்கு திட்டக்குடி மற்றும் பெண்ணாடம் சுற்று வட்டார கிராம பகுதிகளில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் கனமழை பெய்ய துவங்கியது. மாலை 6:00 மணி வரை பெய்த மழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளர்ச்சி நிலவியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை