உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பூண்டியாங்குப்பம் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கல்

பூண்டியாங்குப்பம் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கல்

கடலுார்: பூண்டியாங்குப்பம் அரசு மேல்நிலை பள்ளி ஆண்டு விழாவில், பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில், பள்ளிக்கு கம்ப்யூட்டர் உபகரணங்கள் வழங்கப்பட்டது.கடலுார் அடுத்த பூண்டியாங்குப்பம் அரசு மேல்நிலை பள்ளி ஆண்டு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் கவிதா நாவலன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அருண் வரவேற்றார். விழாவில், 1980-81ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில், பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், ரூ. 30 ஆயிரம் மதிப்பில் கப்யூட்டர் உபகரணங்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் மாணவர் குருநாதன் பரிசு வழங்கினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவில் முன்னாள் மாணவர்கள் ராமச்சந்திரன், குருநாதன், ராஜேந்திரன், நாவலன், வெங்கடேசன், புருஷோத்தமன், ராமலிங்கம், அன்பரசு, விஜயரங்கன், ரவிச்சந்திரன், பிரேம்குமார், சுந்தரம், அருளானந்தம், குமார், பார்த்தசாரதி, சுந்தர்ராஜன், ஆண்டாள் ரவீந்திரன், வாசுகி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை