கணக்கெடுப்பு பணி
சேத்தியாத்தோப்பு: கீரப்பாளையம் வட்டாரத்தில் கோடை சாகுபடி பயிர்களை வேளாண் கல்லுாரி மாணவர்கள் மின்னணு கணக்கெடுப்பு பணி செய்தனர். கீரப்பாளையம் வட்டாரத்தில் 58 கிராமங்களில் எள், பருத்தி, வேர்கடலை, உளுந்து உள்ளிட்ட கோடை கால சாகுபடி பயிர்களை மின்னணு முறையில் கணக்கெடுக்கும் பணியில் வேளாண் துறை ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பரதுார் கிராமத்தில் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அமிர்தராஜ் எள் சாகுபடி வயல்களை ஆய்வு செய்தார். வேளாண் துறையுடன் இணைந்து ஜெ.எஸ்.ஏ., வேளாண் கல்லுாரி மாணவர்கள் சாகுபடி வயல்களை மின்னனு இயந்திரம் மூலம் கணக்கெடுப்பு பணி செய்தனர்.