உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் சாவில் சந்தேகம்; தாய் புகார்

மகள் சாவில் சந்தேகம்; தாய் புகார்

கடலுார் : மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.கடலுார், பச்சையாங்குப்பத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். ஏ.சி.,மெக்கானிக். இவரது மனைவி சுபலட்சுமி, 27; எம்.ஏ., பட்டதாரி. இவர்களுக்கு, 2023ம் ஆண்டு ஆக., 21ம் தேதி திருமணம் நடந்தது. 8 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று காலை சுபலட்சுமி, வீட்டில் துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். கணவன், மனைவி பிரச்னை காரணமாக இருக்கும் என,கூறப்படுகிறது. இந்நிலையில், மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் நாகமல்லி புகாரில், கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !