உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாலுார் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா

பாலுார் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா

நடுவீரப்பட்டு : பண்ருட்டி அடுத்த பாலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் விழா நடந்தது.தலைமை ஆசிரியர் அன்னபூரணி தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர் காயத்ரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற தமிழாசிரியர் அருள்ஜோதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, கவிதை, ஓவியம், நடனப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் பழனிவேல், பட்டதாரி ஆசிரியர்கள் பரமேஸ்வரி, அம்சவள்ளி பேசினர். ஆசிரியை ராஜம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ