உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அரசு பள்ளியில் தமிழ்கூடல்

 அரசு பள்ளியில் தமிழ்கூடல்

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த புதுப்பாளையம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கவிஞர் கண்மணி குணசேகரன் அவர்கள் கலந்து கொண்டார். விழாவில் பேச்சு, நாடகம், பட்டிமன்றம் ஆகிய போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆரோக்யமேரி, ஆசிரியர் முருகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை