உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தமிழகம் 9.6 சதவீதம் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம்

தமிழகம் 9.6 சதவீதம் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம்

சிதம்பரம்: தி.மு.க., ஆட்சியில், தமிழகம், 9.6 சதவீதம் பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது என, அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார். கடலுார் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் 14 தேதி சிதம்பரம் வருகை தருகிறார். 15ம் தேதி காலை சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார். சிதம்பரம் தனியார் மண்டபத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தை துவக்கி வைக்கிறார்.சிதம்பரத்தில் இதற்கான முன்னேற்பாடு பணிகளை நேற்று ஆய்வு செய்த பின், அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது: ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே மக்களின் கோரிக்கைகளை பெட்டியில் வாங்கி வைத்து ஆட்சிக்கு வந்த பின்பு அதற்கான தீர்வை கண்டவர் முதல்வர் ஸ்டாலின். தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.எதிர்க்கட்சித் தலைவர் பழனசாமி மக்களை காப்பாற்ற போகிறோம் என்று கூறி வருகிறார். அவரது ஆட்சியில் எந்த மக்களை காப்பாற்றினார். பொருளாதார வளர்ச்சி இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் 9.6 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு ஒன்றிய நிதி அளிக்காமல் இருந்த போதும் மக்களுக்கு தேவையான திட்டங்களை செய்து வருகிறோம். நடிகர் விஜயை வருங்கால முதல்வர் என்று கூறுவது படத்தில் நடிப்பதற்கு வேண்டுமானாலும் ஏற்கலாம். படங்களில் நடிப்பது வேறு. நேரடியாக மக்களை சந்திப்பது, மக்களுக்கு தேவையான திட்டங்களை தயாரிப்பது வேறு. மக்கள் ஆதரவு தி.மு.க., விற்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை