உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தமிழர் மரபு வேளாண்மை கூட்டு இயக்கம் ஆர்ப்பாட்டம்

தமிழர் மரபு வேளாண்மை கூட்டு இயக்கம் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் தமிழர் மரபு வேளாண்மை கூட்டு இயக்கம் மற்றும் தமிழக உழவர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இணை ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமை தாங்கினார். தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகர் வெங்கட்ராமன் கண்டன உரையாற்றினார். தமிழ்க்காடு இயற்கை வேளாண் இயக்கம் ரமேஷ் கருப்பையா, பழமலை இயற்கை வழி வேளாண் கூட்டமைப்பு சிவக்குமார், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் வீரமணி, சுரேஷ்குமார், ஜனநாயக விவசாயிகள் சங்கம் கந்தசாமி, பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர் சக்திவேல், லட்சுமணன் பங்கேற்றனர். மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசு இந்த நெல் விதைகளுக்கு தமிழ்நாட்டில் தடை செய்ய வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவண் செயலாளர் கனகசபை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி