உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாஸ்மாக் ஊழியர் வாகனம் மோதி பலி

டாஸ்மாக் ஊழியர் வாகனம் மோதி பலி

வேப்பூர்; வேப்பூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி டாஸ்மாக் ஊழியர் இறந்தார்.வேப்பூர் அடுத்த திருப்பயர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் ஸ்டாலின் பிரியன், 45; சிதம்பரம், டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளர். இவர், நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து விட்டு விருத்தாசலம் வந்தார். அங்கிருந்து தனது பைக்கில் (டி.என்., 31 ஏஎஸ் 4425) வேப்பூருக்கு வந்து கொண்டிருந்தார்.நள்ளிரவு 1:00 மணியளவில் விருத்தாசலம் -சேலம் சாலையில் வேப்பூர் அடுத்த என்.நாரையூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி அதே இடத்தில் இறந்தார்.இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை