உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆசிரியை தற்கொலை

ஆசிரியை தற்கொலை

பண்ருட்டி : ஆசிரியை தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம், ஓடை தெருவை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மனைவி பரிதாபேகம்,40; இவர், தொரப்பாடி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தார்.இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக மன உளைச்சலில் இருந்த அவர் கடந்த 23ம் தேதி காலை வீட்டில் துாக்கில் தொங்கினார். சத்தம் கேட்டு திடுக்கிட்ட குடும்பத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை