உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கண்டக்டரை காணோம் நடுவழியில் நின்ற பஸ்

கண்டக்டரை காணோம் நடுவழியில் நின்ற பஸ்

கடலுார் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் அனைத்து பஸ்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை 6:00 மணியளவில், பஸ் நிலையத்திற்குள் வந்த விருத்தாசலம் செல்லும் தனியார் பஸ் ஒன்றில் பயணிகள் முண்டியடித்து ஏறினர். இதனால் சில நிமிடங்களிலேயே பஸ் புறப்பட்டது.சேடப்பாளையம் அருகே சென்றபோது, டிரைவரை போனில் தொடர்பு கொண்ட கண்டக்டர், நான் பஸ்சில் ஏறவே இல்லை. நீ ஏன் புறப்பட்டாய் எனக்கேட்டார். நீ விசில் அடித்த பின்பு தான் நான் புறப்பட்டேன் என டிரைவர் கூறினார். இதையடுத்து சேடப்பாளையத்திலேயே ஓரம் கட்டப்பட்ட பஸ், 20 நிமிடங்கள் வரை காத்திருந்தது. மழை பெய்து கொண்டிருந்ததால் தொலை துாரப்பயணிகள் குறித்த நேரத்தில் வீடுகளுக்கு செல்ல முடியுமா என கவலைப்பட்டனர். நேரம் ஆனதும், பயணிகள் சத்தம் போட ஆரம்பித்தனர். இதனிடையே, மாற்று பஸ்சில் கண்டக்டர் வந்து பஸ்சில் ஏறிய பிறகே பஸ் மீண்டும் புறப்பட்டது. வாடிக்கையாக வரும் பயணிகள், கண்டக்டரை கிண்டல் செய்யவே, அவர் அசடு வழிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை