உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேளாண் அடுக்கக திட்டத்தில் பதிவு செய்ய 30ம் தேதி கடைசி

வேளாண் அடுக்கக திட்டத்தில் பதிவு செய்ய 30ம் தேதி கடைசி

நெல்லிக்குப்பம்: வேளாண் அடுக்கக திட்டத்தின் கீழ் விவசாயிகள் தரவு உருவாக்கும் பணிக்கு பணிக்கு வரும் 30ம் தேதி கடைசி நாளாகும்.இதுகுறித்து அண்ணாகிராமம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அண்ணாகிராமம் ஒன்றியத்தில் உள்ள 45 வருவாய் கிராமங்களில் வேளாண் அடுக்கக திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு உருவாக்கும் பணி நடந்து வருகிறது. விவசாயிகளின் நில உடமைகள் ஆதாருடன் இணைக்கப்படுகிறது. கிராம அளவில் பணியாற்றும் சமுதாய வளமைய பயிற்றுனர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்களில் இப்பணி நடக்கிறது.இதற்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட சிட்டா, அடங்கல், ஆதார் நகல், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் தனி குறியீடு எண் வழங்கப்படும்.இந்த எண் பெற்ற விவசாயிகள் மட்டும் மத்திய, மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியும். தரவு உருவாக்கும் பணிக்கு வரும் 30ம் தேதி கடைசி நாளாகும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை