மாவட்டத்தில் அதிகபட்சமாக கடலுாரில் 23.5 செ.மீ., மழை
கடலுார்: 'பெஞ்சல்' புயல் காரணமாக மாவட்டத்தில் அதிகபட்சமாக கடலுாரில் 23.5 செ.மீ., மழை பதிவானது.வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயலால் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல், நேற்று காலை 8.30 மணி வரை பெய்த மழை அளவு செ.மீ., விபரம்:கடலுார் 23.5, கலெக்டர் அலுவலக பகுதி 21.3, வானமாதேவி 18.5, எஸ்.ஆர்.சி.,குடிதாங்கி 17.5, பண்ருட்டி 14, காட்டுமயிலுார் 11, விருத்தாசலம் 8.7, குப்பநத்தம் 8.5, மேமாத்துார் 8, வடக்குத்து 7.9, வேப்பூர் 7.5, பரங்கிப்பேட்டை 7.1, ஸ்ரீமுஷ்ணம் 6.8, குறிஞ்சிப்பாடி 6.5, லக்கூர் 6.1, அண்ணாமலைநகர் 6, சிதம்பரம் 5.1, காட்டுமன்னார்கோவில் 4.8, கீழ்ச்செருவாய் 4.5, சேத்தியாத்தோப்பு 4.5, புவனகிரி 4.1, கொத்தவாச்சேரி 4, பெலாந்துறை 3.8, லால்பேட்டை 2.2 என மாவட்டம் முவதும் 217.4 செ.மீ., மழை பதிவானது.