மேலும் செய்திகள்
கடலுாரில் குறைகேட்பு கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு
17-Sep-2024
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு குறைகேட்புக் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த சகோதரிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. அப்போது அலுவலகத்திற்கு வந்த 2 பெண்கள் மனு பதிவு செய்யும் இடத்திற்கு வந்தபோது, மறைத்து வைத்திருந்த டீசல் கேனை எடுத்து தங்கள் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, டீசல் கேனை பறிமுதல் செய்து, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.விசாரணையில் அவர்கள் பண்ருட்டி சின்னப்பேட்டையைச் சேர்ந்த சகோதரிகள் விஜயா, சுகுணா என்பதும், அதே பகுதியில் வசிக்கும் 3 பேர் தங்களை தெருவில் நடக்க விடாமல் தடுப்பதும், கால்நடைகளை தெருவழியாக ஓட்டிச்செல்ல விடாமல் பொதுவழியை மறித்து தகராறு செய்கின்றனர். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மனு கொடுக்கும்படி அறிவுறுத்தி அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இருவர் மீதும் கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்தனர்.
17-Sep-2024