உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சுமை துாக்குவோர் போராட்டம்

 சுமை துாக்குவோர் போராட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு சுமை தூக்குவோர் சங்கத்தினர் நேற்று பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் அடுத்துள்ள மணலுாரில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு முன்பு, சுமை துாக்குவோர் சங்கத்தினர் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் சுமை துாக்குவோர் மாநில பாதுகாப்பு சங்க மாவட்ட தலைவர் குழந்தைவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், தொழிற்சங்க அங்கீகார தேர்தலை நடத்த வேண்டும், பணியாளர்கள் நியமணம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பேசப்பட்டது. போராட்டத்தால், கிடங்கில் இருந்து லாரிகளில் மூட்டை ஏற்றி, இறக்கும் பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு வந்த லாரிகள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !