உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கருவேலமரங்கள் அகற்றும் பணி துவங்கியது

கருவேலமரங்கள் அகற்றும் பணி துவங்கியது

நடுவீரப்பட்டு : 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் நடுவீரப்பட்டு நரியன்ஓடையில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி துவங்கியது. நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையில் உள்ள நரியன்ஓடையில் அதிகளவு கருவேல மரங்கள் வளர்ந்திருந்தன. இதனால் மழைக் காலங்களில் மழைநீர் ஓடுவதில் தடை இருந்து வந்தது. மேலும், விஷபாம்புகளின் நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். அதுமட்டுமின்றி, நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் இருப்பதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நீர்வளத்துறை அதிகாரிகள் இந்த ஓடையில் உள்ள கருவேலமரங்களை வேரோடு புடுங்கி அகற்றிட உத்திரவிட்டு அதற்கான பணிகள் நேற்று முதல் துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ