சிதம்பரம் தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி நிகழ்ச்சி
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர், பிரதிநிதியான சந்திரசேகரசுவாமி, தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.தீர்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை அலங்கரிப்பட்ட பல்லக்கில், சந்திரசேகர சுவாமியை எழுந்தள செய்து தோளில் சுமந்து சென்றனர். முதற்கட்டமாக நடராஜர் கோவில் குளமான சிவகங்கையில் தீர்தவாரி நடந்தது. அங்கிருந்து கிள்ளைக்கு எழுந்தருள செய்யப்பட்டது.பின்னர், புலிமடு தீர்த்தம், குய்ய தீர்த்தம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகசேரி தீர்த்தம், பிரம தீர்த்தம், சிவப்பிரியை தீர்த்தம், திருப்பாற்கடல் தீர்த்தம், பரமானந்த கூபம் ஆகிய தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி நடந்தது. தச தீர்த்த நிகழ்ச்சியையொட்டி, காலை முதல் மாலை வரையில், அனைத்து தீர்த்தகுளங்ளிலும் பக்தர்கள் நீராடி தரிசனம் செய்தனர்.