உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேய்பிறை சஷ்டி வழிபாடு

தேய்பிறை சஷ்டி வழிபாடு

பெண்ணாடம் : தேய்பிறை சஷ்டியொட்டி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில், சுப்ரமணியர் சாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.இதையொட்டி, நேற்று காலை 9:00 மணியளவில் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை 4:30 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் ஆகியவைகளால் சிறப்பு அபிேஷகம்; மாலை 5:15 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர், திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி ஆகிய கோவில்களில் முருகர் சாமிக்கு சஷ்டி சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ