உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பஸ் வாய்க்காலில் இறங்கியதால் பரபரப்பு

அரசு பஸ் வாய்க்காலில் இறங்கியதால் பரபரப்பு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே சென்ற அரசு பஸ் ஸ்டியரிங்க் உடைந்து கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் இறங்கியதால் பரபரப்பு நிலவியது. விக்கிரவாண்டி - தஞ்சாவூர் பைபாஸ் சாலைக்காக சேத்தியாதோப்பு அடுத்த பின்னலுாரில் துவங்கி கரைமேடு வரை வாலாஜா ஏரியின் பாசன வாய்க்கால்களில் பாலங்கள் கட்டுவதற்காக பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது.நேற்று காலை 9:00 மணியளவில் சென்னையிலிருந்து வந்த அரசு பஸ் (டிஎன்.32.என் 4410) (தடம் எண் 399) கரைமேடு அருகே ஸ்டியரிங்க் உடைந்து கட்டுப்பாட்டை இழந்து பாலம் கட்ட தோண்டிய பள்ளத்தில் இறங்கியது. இதனால், பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். அருகில் இருந்தவர்கள் பயணிகளை பத்திமாக மீட்டனர். பின், வேறு பஸ்சில் பயணிகள் புறப்பட்டு சென்றனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வாய்க்காலில் இறங்கிய பஸ்சை பொக்லைன், கிரேன் உதவியுடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை