உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா; சப் கலெக்டர் தலைமையில் ஆலோசனை

தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா; சப் கலெக்டர் தலைமையில் ஆலோசனை

சிதம்பரம்: சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. சிதம்பரம் ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, சப் கலெக்டர் அலுவலகத்தில், முன்னேற்பாடு பணிகள் குறித்த, அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள, ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவி கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 3 ம் தேதி நடைபெற உள்ளது. 1995 ஆம் ஆண்டுக்கு பின், 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில், கும்பாபிஷேக விழாவையொட்டி, முன்னேற்பாடு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற, முதல் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, சப் கலெக்டர் கிஷன்குமார் தலைமை தாங்கினார். சிதம்பரம் நகராட்சி துணை தலைவர் முத்துக்குமார், டி.எஸ்.பி., பிரதீப், தாசில்தார் கீதா, நகராட்சி பொறியாளர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் அறங்காவலர்கள் சம்பத், சௌந்தர்ராஜன், கிருஷ்ணமாச்சாரி, அறநிலையத்துறை ஆய்வாளர் சீனிவாசன், தெய்வக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெமினி ராதா, சிதம்பரம் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சப் கலெக்டர் கிஷன்குமார் பேசுகையில்'' கும்பாபிஷேகத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். குடிநீர், போக்குவரத்து பாதுகாப்பு, கழிப்பறை உள்ளிட்ட அனைத்து, வசதிகளும் மற்றும் நெரிசல் இன்றி தரிசனம் செய்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படும்.பக்தர்கள் பெருமாளை பார்க்காத சூழ்நிலை ஏற்பட்டாலும், பெருமாள் பக்தர்களை பார்த்துக்கொள்வார், கவலையின்றி கும்பாபிஷேக விழாவை நடத்துங்கள்'' என கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை